ஆஹா.. Whatsapp-ல் வந்த அசத்தல் அப்டேட்… இனி ஒரே நேரத்தில் அனைவரையும்….!

By Nanthini on ஐப்பசி 23, 2025

Spread the love

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றன. இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் whatsapp-ல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் Mention Everyone என்ற புதிய அப்டேட்டை Meta கொண்டு வந்துள்ளது.

இதன் மூலமாக ஒரு குரூப் சாட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒரே நேரத்தில் Mention செய்து மெசேஜ் செய்ய முடியும். முன்னர் அனைவரையும் Tag செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு பெயராக தேர்வு செய்ய வேண்டும். தற்போது Beta பயனர்களுக்கு கிடைக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.