உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் உள்ளது போன்ற வசதிகளை வாட்ஸ் அப்பிலும் வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிடுள்ளதாக தெரிகிறது. பயனர்களை தக்க வைக்க சமூக வலைத்தள செயலி நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வரும் நிலையில் வாட்ஸ் அப்பில் AI வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் நீங்கள் எளிமையாக AI போட்டோக்களை உருவாக்க முடியும். அதாவது உதாரணமாக AI- க்கான Blue circle ஐ கிளிக் செய்து imagine என்று டைப் செய்து space விட்டு தேவையானதை டைப் செய்தால் 2 நொடிகளில் உங்களுக்கு அந்த புகைப்படம் வந்து விடும். இந்தப் புதிய அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
