அப்படிப்போடு.. இனி WhatsApp-ல் விளம்பரம் வந்தாச்சு.. பயனர்களுக்கு மெட்டா சூப்பர் அறிவிப்பு..!

By Nanthini on ஆடி 12, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு செயலிகளில் முதலிடத்தில் இருப்பது whatsapp தான். பெரும்பாலான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெற்றா நிறுவனம் தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி whatsapp செயலியில் இனி விளம்பரங்கள் இடம் பெறும் என்று மெட்டா நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பதிவுகளில் வருவது போல whatsapp ஸ்டேட்டஸ் டேபில் விளம்பரம் வரும். அதே நேரம் சாட் லிஸ்டில் இடையூறாக இருக்காது என்றும் பிரைவசி விதிமுறைகளை மீறாத படியும் தனிப்பட்ட மெசேஜ்களை பாதிக்காத வகையிலும் இருக்கும் என்றும் மெட்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சோதனையில் உள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.