“இனி கதை வேற”…. அதிமுகவின் பஞ்சாயத்தை தீர்க்கும் உயர்மட்ட குழு… இறங்கி வந்த இபிஎஸ்…. தொடங்கும் மெகா ஆப்பரேஷன்….!

By Nanthini on ஆவணி 23, 2026

Spread the love

அதிமுகவில் நீடித்து வரும் உள்முரண்பாடுகளையும், தொடர் தேர்தல் சரிவுகளால் மூத்த தலைவர்கள் மத்தியில் எழும் அதிருப்திகளையும் சரிசெய்யஎடப்பாடி பழனிசாமியின் இந்த ‘உயர்மட்டக் குழு’ முயற்சி ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அமைக்கப்படும் இக்குழு, கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் ஆலோசனைகளை வழங்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஒற்றைத் தலைமைக்கு எதிரான அதிருப்தி குரல்கள், ஒதுக்கி வைக்கப்பட்ட தலைவர்களின் தாக்கம் மற்றும் கள அளவிலான தொண்டர்களின் அதிருப்தி போன்ற சவால்கள் இருக்கும் சூழலில், இக்குழுவின் ஆலோசனைகள் வெறும் காகித அளவிலேயே நிற்காமல் அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் உத்திகளாகச் செயல்வடிவம் பெற்றால் மட்டுமே இத்திட்டம் எதிர்பார்த்த முழுமையான வெற்றியைத் தரும்.