இனிப்பு பிரியர்களா நீங்கள்… அதிகப்படியான இனிப்பு சாப்பிடும்போது உடம்பில் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா…?

Spread the love

இனிப்புகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பண்டம் இனிப்புகள் தான். கண்ணில் பார்த்த உடனே நாக்கு எடுத்து சாப்பிட வேண்டும் என்று கேட்கும். அதனால் பலர் இங்கு இனிப்பை விரும்பி சாப்பிடுபவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த இனிப்பு சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். அவை என்னென்ன என்பதை இனி காண்போம்.

நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தான் சர்க்கரையை சாப்பிடக்கூடாது இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது என்பது இல்லை. நீராழிவு நோய் இல்லாதவர்களும் கவனமாகவே இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக இனிப்புகள் சாப்பிடும் போது அது நம் உடல் நலனை பாதிக்க தான் செய்யும். உடலுக்கு சர்க்கரை தேவை ஆனால் அதிகப்படியாக இனிப்புகளை உட்கொள்ளும்போது அது கொழுப்பாக நம் உடலில் சேரும். இடுப்பு, தொடைகள், கைகள், வயிறு பகுதியில் கொழுப்பாக சேர்ந்து உடல் பருமனை அது அதிகரிக்க செய்கிறது.

அதிகப்படியாக இனிப்புகளை சாப்பிடும் போது கண்டிப்பாக நம் பற்கள் பாதிப்படையும். பற் சிதைவு ஏற்பட்டு பல்வலி பற்களில் கிருமி பாதிப்பு ஏற்பட்டு பற்களை அது அதிகமாக சேதப்படுத்தும். பற்களில் எதுவுமே வருமுன் காப்பது தான் சிறந்தது. சிறிய அளவில் பற்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த கிருமிகள் அரித்து அரித்து நம் முழு பற்களையும் கெடுத்து விடும். இனிப்பினால் மட்டுமே இந்த கிருமிகள் வருகிறது என்பதால் இனிப்பை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். இரவில் பல் துலக்கி விட்டால் நல்லது.

இனிப்புகளை அதிகமாக உட்கொள்வதன் மூலம் சரும பாதிப்பு ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் இனிப்புகளை அதிகமாக உட்கொள்ளும் போது அது நம் பசியை தூண்டுகிறது. அப்போது நாம் அதிகமாக சாப்பிட ஆரம்பிக்கும் போது தானாகவே நம் உடல் எடையையும் கூடிவிடும். உடல் எடையில் கவனமாக இருப்பவர்கள் நிச்சயம் இனிப்பை தவிர்க்க வேண்டும். உடல் எடையை குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள் கட்டாயம் இனிப்புகளை எடுத்துக் கொள்ளவே கூடாது. இப்படியாக இனிப்புகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் நீரழிவு வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. அதனால் எதையுமே அளவாக சாப்பிடுவது மிகவும் நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago