“நான் செத்த பிறகு யாரு இருக்கா?”… கங்கைக்குச் சென்று சடங்குகளை முடித்துவிட்டு வந்து முதியவர் செய்த காரியம்!… உறைந்துபோன கிராம மக்கள்…!!!

By Muthu Mani on வைகாசி 17, 2026

Spread the love

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில், ஒரு முதியவர் தான் உயிருடன் இருக்கும்போதே தனக்கான இறுதிச் சடங்கு விருந்தை (பண்டாரா) நடத்தியுள்ள விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கராயிரா பகுதியில் உள்ள ஹாஜிநகர் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான கல்யாண் பால் என்பவருக்குத் திருமணம் ஆகவில்லை. பெற்றோருக்கு ஒரே மகனான இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால், தனது மரணத்திற்குப் பிறகு இந்து முறைப்படியான பிண்ட தானம், இறுதிச் சடங்குகளைச் செய்ய யாரும் இல்லையே என்ற கவலையும் தனிமையும் அவரை இந்த அதிரடி முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது.

தனது இறுதி ஆசையை நிறைவேற்ற நினைத்த கல்யாண் பால், இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்குச் சென்று திரிவேணி சங்கமத்தில் தனக்கான சடங்குகளை முறையாகச் செய்து கங்கையிலும் நீராடிவிட்டுத் தன் கிராமத்திற்குத் திரும்பியுள்ளார். மேலும், “என் சொந்த மக்களாலேயே நான் கொள்ளையடிக்கப்பட்டேன்…” என்ற உருக்கமான கவிதையுடன், “கடைசி கங்கா பூஜை, நம் சொந்த மக்கள் முன்னிலையில் பண்டாரா” என்று அச்சிடப்பட்ட அவரது அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. தொடர்ந்து மே 15-ஆம் தேதி முதல் தனது வீட்டில் 24 மணி நேரத் தொடர் ராமநாம பாராயணத்தையும் தொடங்கி கிராமத்தையே ஆன்மீக பூமியாக மாற்றினார்.

   

இதனைத் தொடர்ந்து மே 16, சனிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு விருந்து தொடங்கியது. வழக்கமான மரண வீட்டின் சோகம் ஏதுமின்றி, அந்த முதியவரே புன்னகையுடன் முன்னின்று வரவேற்ற இந்த விசித்திர விருந்தில், சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 7,000 மக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர். இந்த உணர்ச்சிகரமான நிகழ்வுக்குப் பின் பேசிய கல்யாண் பால், “எனக்குப் பிறகு என் சடங்குகள் முழுமையடையாமல் போய்விடுமோ என்று அஞ்சினேன்; ஆனால் இப்போது மரணம் எப்போது வந்தாலும் என் கண் முன்னேயே அனைத்தையும் பார்த்துவிட்டதால் என்னால் நிம்மதியாக இறக்க முடியும்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.