snake

மழை நேரங்களில் வீடுகளில் பாம்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்… விளக்கம் தரும் அதிகாரி…

By admin on ஐப்பசி 18, 2024

Spread the love

மழைக்காலம் என்றாலே பலருக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து குளிர்ச்சியான ஒரு சூழலில் ரம்யமான காலம் தான் மழைக்காலம். ஆனால் வெயில் காலத்தை காட்டிலும் மழைக்காலத்தில் தான் அதிக ஆபத்து இருக்கிறது.

   

ஏனென்றால் மழைக்காலத்தில் தான் பலவித தொற்று நோய்கள் பரவும். உடல் உபாதைகளை ஏற்படுத்தும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்கள் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு இந்த காலத்தில் இருமல் ஜலதோஷம் காய்ச்சல் என வந்துவிடும். இதையும் தாண்டி மழைக்காலத்தில் ஆபத்தான ஒரு விஷயம் இருக்கிறது.

   

அது என்னவென்றால் மழைக்காலத்தில்தான் பாம்பு பூரான் தேள் போன்ற விஷம் பொருந்திய உயிரினங்கள் நம் வீட்டிற்குள் வரும். அதற்கு காரணம் வெளியில் ஒதுங்க இடம் இல்லாததால் அது நிழல் தேடி நம் வீட்டை நோக்கி வரும். ஏற்கனவே சென்னை போன்ற பெருநகரில் மழை பெய்தால் தண்ணீர் தேங்குகிறது. இந்த தண்ணீரின் மூலமாக பாம்புகள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்று பாம்புகள் நம் வீட்டிற்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் விளக்கம் தந்து இருக்கின்றார்கள்.

 

அது என்னவென்றால் மழை நேரங்களில் பாம்பு போன்ற கொடிய விஷ ஜந்துக்கள் நம் வீட்டில் வராமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் நம் வீட்டை சுற்றி இருக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத செடிகளை வளர்க்க கூடாது. அதிக குப்பைகளை போடக்கூடாது. பாம்பு வந்து தங்குவதற்கு ஏதுவான பெரிய குழல் போன்ற பொருட்களை வைக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்.

இதையும் தாண்டி பாம்பு நம் வீட்டிற்கு வந்து விட்டால் முதலில் பதறவே கூடாது. நாம் அதை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே அது நம்மை எதுவும் செய்யாது பாம்பு எந்த திசையில் இருக்கிறதோ அதற்கு நேர் திசையில் இடம் விட்டு ஒரு வலை போன்று வைக்க வேண்டும். உடனடியாக தீயணைப்பு துறை அதிகாரிகள் அல்லது பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு போன் செய்ய வேண்டும். அவர்கள் வரும் வரையிலும் பாம்பு எங்கு செல்கிறது என்பதை கண்காணித்துக் கொண்டு இருங்கள். கூடுமானவரையில் அதை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே அது நம்மை எதுவும் செய்யாது தற்காத்துக் கொள்ள தான் மனிதர்களை பாம்புகள் தாக்கும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.