திருமணமான முதல் இரவே மனைவியால் நிராகரிக்கப்பட்டதாகவும், இரண்டு ஆண்டுகள் நீடித்த விவாகரத்து வழக்கின் முடிவில் தனக்கு ரூ 10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் ஒரு நபர் சமூக வலைதளத்தில் தனது மனவேதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி “எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை” என்று கூறி விலகியதாகவும், அதன் பிறகு இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறைப்படி விவாகரத்து பெற முயன்றபோது, அவரது மனைவி இழப்பீடாக ரூ 10 லட்சம் தொகையைக் கேட்டுள்ளார். மனைவியும் நல்ல வேலையில் இருந்து சம்பாதித்து வந்தபோதிலும், வழக்கறிஞர் கட்டணம் மற்றும் நீதிமன்ற நடைமுறைகளுக்காகப் பல ஆண்டுகள் அலைந்து திரிவதை விட, கேட்கும் தொகையைக் கொடுத்து வழக்கை முடிப்பதே நல்லது என்று சட்ட வல்லுநர்களும் நண்பர்களும் அவருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
நீண்ட காலம் நீதிமன்றத்திற்குச் சென்று மன உளைச்சலுக்கும் கூடுதல் செலவுக்கும் ஆளாவதைத் தவிர்க்க, வேறு வழியின்றி ரூ 10 லட்சம் கொடுத்து பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். குறுகிய காலத் திருமண வாழ்க்கைக்கு இவ்வளவு பெரிய தொகையை இழக்க வேண்டியிருந்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது
