மகள் சௌந்தர்யாவை நினைத்து அழும் அவங்க அம்மா அப்பா… தோழி சொன்ன விஷயம்..!

By Soundarya on மார்கழி 22, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சௌந்தர்யா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் முதல் நாளில் சௌந்தர்யா விஜய் சேதுபதியிடம் நான் மாடலாக இருக்கிறேன். எனது குரலுக்காக நான் பல இடங்களில் அவமானம் பட்டிருக்கிறேன். அதற்காகவே மிமிக்ரி செய்வது போன்று பேச வேண்டிய நிலைமை என வேதனையோடு கூறினார். உடனே விஜய் சேதுபதி உங்களுடைய நிஜ குரலை அருமையாக இருக்கிறது என அவரை பாராட்டினார்.

   

சமீபத்தில் சௌந்தர்யா தனது காதலால் பட்ட வேதனை குறித்து மற்ற போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருந்து விளையாடி வருகிறார். இந்த நிலையில் இப்போதைக்கு சௌந்தர்யா ஜாக்குலின் முத்துக்குகாரன் தீபக் உள்ளிட்ட சிலர் வலுவான கோட்டையாளராக இருந்தாலும் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் இந்த சூழலில் நல்ல பெயர் வாங்கிவிட்டு பிறகு உள்ளே சக போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களிடமும் நெகட்டிவிட்டியை சம்பாதித்து இருப்பதாக சொல்லப்படும் சௌந்தர்யாவின் தோழி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கணும் என்கிறது அவங்களுடைய நீண்ட நாள் ஆசை.

   

 

ஒவ்வொரு சீசன் தொடங்கும் போதும் முயற்சி செய்வாங்க. அவங்க நிஜத்தில் எப்படியோ அப்படித்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்காங்க. என்னுடைய பிரண்ட் அப்படின்றதால சொல்லல. ஆனால் நிகழ்ச்சிக்குள் போன சில நாட்களே வலுவான போட்டியாளராக உருவாகிடுவாங்களோன்னு பயந்த சில போட்டியாளர்களுடைய ஆதரவாளர்கள் வெளியிலிருந்து அவங்க பிஆர் வச்சிருக்காங்கன்னு பேச தொடங்கிட்டாங்க. சௌந்தர்யாவுக்கு ஆதரவா சமூக ஊடகங்கள் பேசியதை எல்லாம் பிஆர் ஒர்க்குன்னு எப்படி சொல்ல முடியும்? அவளுடைய குரல் பிறந்ததுல இருந்து அப்படித்தான் இருக்கு..

#image_title

அது அவளுடைய தவறு இல்லை சின்ன வயசுல இந்த குரலால் அவ நிறைய அவமானங்களை கஷ்டங்களை சந்தித்து பள்ளிக்கூட நாட்களில் கூட படிக்கிற பசங்க இந்த குரலை கேலி செய்றாங்கன்னு வீட்ல வந்து அழுது ஸ்கூல் போக மாட்டேன்னு சொன்னதெல்லாம் கூட நடந்திருக்கிறது. வீட்டுக்குள் இருக்கிற போட்டியாளர்களை இவங்க நல்ல பிரண்ட் என்று நம்பினால் சிலர் கூட இவர்களை கேலி செய்ததெல்லாம் நடந்துச்சு. இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நான் சொல்றேன். ஸ்கூல் நாட்கள்ல அவங்க எப்படி இந்த குரல் பிரச்சினைக்காக அழுதாங்களோ அதேபோல இப்ப சில நேரம் ஷோ பார்த்துட்டு இன்னும் எத்தனை நாள் தான் இதை வைத்து அவளை மட்டம் தட்டுவாங்கன்னு சௌந்தர்யாவோட அம்மா அப்பா அழுதுட்டு இருக்காங்க என்று கூறியுள்ளார்.