BREAKING: தமிழக தேர்தல் தேதி… சற்றுமுன் அதிர்ச்சி தகவல்… தேர்தல் ஆணையம் புதிய டுவிஸ்ட்….!

By Nanthini on மாசி 25, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மே மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரலிலேயே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இந்த முறையும் அதே நடைமுறை தொடரும் என அரசியல் வட்டாரங்கள் கணித்திருந்தன.

இருப்பினும், தேர்தல் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு மே மாதத்தில் வாக்குப் பதிவை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய அதிகாரி ஞானேஷ்குமார் தலைமையிலான 15 பேர் கொண்ட உயர்மட்டக் குழு இன்று இரவு சென்னை வரவுள்ளது; இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகே தமிழக தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான மற்றும் தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.