தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு தலைவராகப் பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகையின் தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளிலும் போட்டியிட்டு வரலாற்று வெற்றியைப் பெற்றது. இருப்பினும், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியைத் தொடர வேண்டும் என்று ஒரு தரப்பும், தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பும் போர்க்கொடி தூக்கியதால் கட்சிக்குள் கடுமையான கோஷ்டிப் பூசல் வெடித்தது. தவெக கூட்டணி அமையாமல் தடுத்ததாக செல்வப் பெருந்தகை மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், “தேசியக் கட்சியில் அகில இந்திய தலைமைதான் முடிவுகளை எடுக்கும்” என்று அவர் விளக்கமளித்தார். மேலும், புரிதல் இல்லாமல் எழும் விமர்சனங்களால் அதிருப்தியடைந்த அவர், தன்னை பதவியிலிருந்து விடுவிக்குமாறு கட்சி மேலிடத்திற்குக் கடிதம் எழுதினார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் மாணிக்கம் தாகூரை புதிய தலைவராக அறிவித்துள்ளது. நாளை மாலை 4:30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் அவர் முறைப்படி பதவியேற்கிறார். இந்த விழாவில் முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகை, அமைச்சர்கள் ராஜேஷ் குமார், பி.எஃப். விஸ்வநாதன், மற்றும் கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர். புதிய தலைவராக நியமிக்கப்பட்டவுடன் மாணிக்கம் தாகூர் முன்னாள் மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு வாழ்த்துப் பெற்றதுடன், கட்சியின் ஒற்றுமைக்காக அனைவரது ஒத்துழைப்பையும் கோரியுள்ளார். இன்று டெல்லியில் அகில இந்திய தலைவர் மற்றும் அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெறுகிறார்.
புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும், தேர்தல் அறிவிப்பு வரும்போது இடப்பங்கீடு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், “ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கு இடையே நிலவும் வலுவான உறவு தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டார். 59 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக ஆட்சியில் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளதால், தங்களுக்கு மக்கள் மீதான பொறுப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சி வழங்குவதும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த வலுவான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்வதே தங்களது முதன்மை இலக்கு என்று மாணிக்கம் தாகூர் பிரகடனப்படுத்தியுள்ளார். பெரும் தலைவர்கள் அலங்கரித்த இந்தத் தலைவர் பொறுப்பை மிகுந்த கவனத்துடன் கையாளப் போவதாகக் கூறிய அவர், தற்போது கிடைத்துள்ள அமைச்சரவை வாய்ப்பைப் பயன்படுத்தி, இரண்டு அமைச்சர்களின் துணையோடும், தொண்டர்களின் ஒத்துழைப்போடும் காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் மிக வலிமையான இயக்கமாக மாற்றுவதே தனது லட்சியம் என்றார். காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராடியதாகவும், தற்போது கிடைத்துள்ள இந்த மரியாதையுடன் மக்களுக்கான பணியில் இன்னும் தீவிரமாகச் செயல்படப் போவதாகவும் அவர் பெருமிதத்
