பெரும்பாலும் மொபைல் போனின் திரை அடிக்கடி [Frozen] ப்ரீசாகிவிடும். உடனே நாம் ரீஸ்டார்ட் செய்து மொபைலை உபயோகிக்க ஆரம்பிப்போம். இதற்கு சில எளிதான தீர்வுகள் குறித்து இந்த பதிவில் காண்போம். ரிஸ்சார்ட் (Restart) செய்து உபயோகிக்கும் போது மொபைல் சீராக இயங்கும். இதுபோன்று உங்கள் மொபைலில் ஏற்பட்டால் மறு தொடக்கம் செய்யும் வரை பவர் பட்டனை அழுத்திப் பிடிக்கவும், இது பயன்பாடுகளை உடனடியாக மூடி தற்காலிக கோப்புகளை அளிக்கும், இதனால் உறைதல் சிக்கல் சரியாகிவிடும்.
அதேபோல், பேட்டரியை அகற்றி மீண்டும் பொருத்தி இயக்கினால் சீராக செயல்படும். இதுவும், அனைத்து ஃபோன்களுக்கும் பொருந்தாது , மாடலுக்கு ஏற்றவாறு ஆன்லைனில் தேடி தகவலை அறிந்து கொள்ளுங்கள். கேச் பார்ட்டிஷனை டெலிட் செய்து சாதனத்தின் அமைப்புகளை புதுப்பித்தால் விரைவாக இயங்க உதவும். மொபைலில் உள்ள தேவையில்லாத ஆப்களை அன்இன்ஸ்டால் செய்தாலும் , இந்த பிரச்சனைக்கு முடிவாக இருக்கும். அதேபோல் ஃபோனில் பேட்டரி தீர்ந்து விட்டால் சார்ஜ் போட்டவுடன் ஆன் செய்யாமல் சிறிது நேரம் கழித்து ஆன் செய்தால் சீராக இயங்கும். இதுபோன்று அடிக்கடி உறையும் பிரச்சனை இருந்தால் போனை தொழில்முறை வல்லுனர்களிடம் கொடுத்து திருத்திப் பயன்படுத்துங்கள்.
