இதை பார்த்து சிரிக்கவா..? சிந்திக்கவா..? கனடா கடற்கரையில் சோப்பு போட்டு குளித்த இந்திய ஜோடி… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on ஆவணி 12, 2025

Spread the love

கனடா கடற்கரையில் இந்தியர்கள் என்று கூறப்படும் ஒரு குழு குளித்துக் கொண்டிருந்தபோது, வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, உள்ளூர்வாசிகள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளது. அதாவது வைரலான இந்த வீடியோவில், இரண்டு ஜோடிகள் சோப்பு போட்டு குளித்து கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நீர்நிலையில் சோப்பு மற்றும் சுத்திகரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று விமர்சித்து வருகின்றனர்.

இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் சோப்பு மற்றும் ஷாம்பு பயன்படுத்தி குளித்து சுத்தம் செய்வதை இந்த வீடியோ காட்டுகிறது. கடற்கரையில் இருந்த ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் உள்ளூர்வாசிகளும் நெட்டிசன்களும் அவர்களை இந்தியர்கள் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.  ஆனால் அந்த மக்கள் குழு இந்தியர்களா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை.