தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

By Begam on சித்திரை 28, 2024

Spread the love

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டவர் தான் நடிகர் மோகன். பல தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாக ஒரு காதல் இளவரசன் போல வலம் வந்து கொண்டிருந்தார். இயக்குனர் சுந்தர்ராஜ் இயக்கத்தில் மோகன் நடித்து 1982ல் வெளிவந்த ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி அடைந்தது.

   

இப்படம் நடிகர் மோகன் அவர்களின் திரைப்பயணத்தில் 300 நாட்களைக் கடந்த மூன்றாவது திரைப்படம். இதற்கு முன்பும் மோகன் நடிப்பில் நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள் போன்ற திரைப்படங்கள் 300 நாட்கள் ஓடியது. ஹீரோவாக அறிமுகமாகிய முதல் மூன்று வருடங்களிலும் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்த மூன்று படங்களை கொடுத்த ஒரே ஹீரோ நடிகர் மோகன் மட்டுமே.

   

 

இவருக்கு ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்துக்காக ‘சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும்  வழங்கப்பட்டது. இப்படி வெற்றி படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்த இவரது திரை வாழ்க்கையின் இடையில் சில வதந்திகள் மற்றும் பிரச்சனைகளில் சிக்கியதால் இவரது சினிமா பயணம் அப்படியே முடிந்தது. தற்பொழுது மீண்டும் தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கிய அவர் ‘ஹரா ‘ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் மைக் மோகனை திரையுலகிற்கு அறிமுக படுத்தியது இயக்குனருமான மனோபாலாவுக்கும்,  ஸ்டில்ஸ் ரவிக்கும் முக்கிய பங்கு உண்டு.  நடிகர் மனோபாலா ஒரு கையில் மோகனின் போட்டோவை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பட கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். அப்படி வந்த வாய்ப்பு தான் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘ நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்ற படம்.

இதைத்தொடர்ந்து அவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வளர்ந்தார். ஆனால் தன்னுடைய இந்த நிலைக்கு காரணமான நடிகர் மனோபாலாவை அவர் எப்பொழுதும் மறக்கவே இல்லை. தனக்காக வாய்ப்பு தேடி அலைந்த அவருக்கு, கைமாறு செய்யும் விதமாக ‘ தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், உங்க படத்தை இயக்குற பொறுப்பு மனோபாலாவுக்குத் தான் கொடுக்க வேண்டும்’ என்று கூறுவாரறாம். ன்றார். அப்படி தான் பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, நான் உங்கள் ரசிகன் போன்ற திரைப்படங்களை இயக்கம் வாய்ப்பு மனோபாலாவுக்கு கிடைத்ததாம்.