உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் ‘டானி தாக்கூர்’ என்ற சமூக ஊடகப் படைப்பாளி நடத்திய விசித்திரமான சமூக பரிசோதனை ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு ரிஷிகேஷின் தெருக்களில் நடந்து சென்ற அவர், அங்கு வரும் பக்தர்களின் நெற்றியில் திலகம் வைக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் பலரும் மறுத்த நிலையில், கங்கா ஆரத்தி நடக்கும் தடித்துறைக்கு சென்றதும் நிலைமை முற்றிலும் மாறியது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் அவரிடம் திலகம் இட்டுக் கொண்டு, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ10, ரூ 20 மற்றும் சிலர் ரூ100 வரை அவருக்குக் கொடுத்தனர்.
இந்த எளிய முயற்சி மூலம், அவர் வெறும் 3 மணி நேரத்தில் சுமார் 400 பேருக்கு திலகம் இட்டு ரூ2,350 சம்பாதித்துள்ளார். தனது அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்த அந்த வாலிபர், ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே இந்த வேலையைச் செய்தால் கூட, மாதத்திற்கு ரூ 70,000 வரை மிக எளிதாகச் சம்பாதிக்க முடியும் என்று கணக்கிட்டுக் காட்டியுள்ளார். மேலும், வேலை இல்லாத தனது நண்பர்களுக்கு இந்த வீடியோவை பகிருமாறும் அவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரல் வீடியோவைப் பகிர்ந்த ஆர்.பி.ஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, “பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழி” என்று ஆச்சரியத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களின் கார்ப்பரேட் வேலைகளை விட இதுவே சிறந்தது என்றும், “அடுத்த கோடைக்கால இன்டர்ன்ஷிப் திட்டம் தயார்” என்றும் வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே வேளையில், சில பயனர்கள் மத நம்பிக்கையையும், பாரம்பரிய ஆசாரங்களையும் ஒரு சுயநல வணிக வாய்ப்பாகப் பயன்படுத்துவது தவறு என்றும் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…