பெங்களூருவில் சமீபத்தில் பெண் காவல் அதிகாரி ஒருவர் வீடியோ அழைப்பில் ஆடைகளைக் கழற்றுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்தப் பெண் கர்நாடக மாநில தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் என்பது தெரியவந்தது. அவர் ஹிண்டல்கா மத்திய சிறையில் பணியாற்றிய போது, அங்கு அடைக்கப்பட்டிருந்த குனிகல் பகுதியைச் சேர்ந்த ரவுடி சாய்குமார் என்பவருடன் வீடியோ காலில் பேசியபோதே இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை சாய்குமார் அண்மையில் கசியவிட்டதை அடுத்து, அவர் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில் அந்தப் பெண் இன்ஸ்பெக்டர் புகார் அளித்துள்ளார். அதே சமயம், சிறைக்குள் செல்போன், மது மற்றும் சொகுசு வசதிகளைச் செய்து தர தன்னிடம் அந்த இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெற்றதாக ரவுடி சாய்குமாரும் அவர் மீது பகிரங்கமாக எதிர் புகார் கொடுத்துள்ளார். அவர் லஞ்சமாக அளித்த அதே செல்போனில்தான் இந்த ஆபாச வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகியுள்ளது.
தற்போது புகார் அளித்த பெண் இன்ஸ்பெக்டர் விடுமுறையில் சென்றுள்ள நிலையில், லஞ்சக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது துறைரீதியான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிறை அதிகாரிகளின் ஊழல் குறித்து இன்ஸ்டாகிராமிலும் மற்றொரு வீடியோ வெளியானதால், பெலகாவி சி.இ.என் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காவல் அதிகாரியே ரவுடியுடன் ரகசியத் தொடர்பு வைத்து ஆபாசமாக நடந்துகொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா பகுதியில், போக்குவரத்துத் துறை பெண் ஆய்வாளர் பார்வதி என்பவரின் வாகன ஓட்டுநர்,…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 40 வயதான ராஜேஷ் என்பவரை அவரது மனைவி விமலா கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ரேவதி (45) என்பவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…
தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இரவு நேரத்தில் உணவு அல்லது பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியர்…
உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…