தொங்கும் தொப்பையை குறைக்க முடியாமல் சிரமப்படுறீங்களா?… இதோ டாக்டர் கொடுக்கும் டிப்ஸ்… இனி இந்த நீரை குடித்தால் மட்டும் போதும்…!

By Nanthini on தை 7, 2026

Spread the love

தற்போது பலரும் தங்களுடைய ஆரோக்கியத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக தொப்பையை கொண்டவர்கள் ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது எடுக்கும் தீர்மானம் நிச்சயம் அந்த தொப்பையை குறைப்பதாகவே இருக்கும். ஏனென்றால் தற்போது உலக அளவில் பெரும்பாலானோர் தொப்பை பிரச்சனையை கொண்டுள்ளனர். இந்த தொப்பைக்கு முக்கிய காரணம் உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையும் மோசமான உணவு பழக்கங்களும் தான் காரணம். பெரும்பாலானவர்களின் வேலை என்பது கம்ப்யூட்டர் முன் இருப்பதால் நீண்ட நேரம் தொடர்ந்து அமர்ந்த வாரே வேலை செய்ய வேண்டியுள்ளது. அதனால் உண்ணும் உணவு அப்படியே கொழுப்புகளாக வயிற்று பகுதியில் தேங்கிய தொப்பையை வரவழைக்கின்றன. இப்படி தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மருத்துவர் நர்மதா தனது instagram பக்கத்தில் பகிர்ந்து உள்ள மூன்று விதமான பானங்களை தினமும் குடித்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

முதலில் மல்லி நீர் உடலில் கெட்ட நீர் தேங்குவதை குறைக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். இந்த மல்லி நீரை தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 150 மில்லி நீரை ஊற்றி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி விதைகளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை இறக்கி குளிர வைத்து வடிகட்டி தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

   

அடுத்ததாக வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் உடலில் உள்ள சத்துக்களை வெளியேற்றுவதோடு உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி கொழுப்புகளை கரைக்கும் திறனை மேம்படுத்தும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிழிந்து அத்துடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலந்தே தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொங்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

   

இறுதியாக பட்டை நீர் சர்க்கரை உணவுகளின் மீதான நாட்டத்தை கட்டுப்படுத்தும். இன்சுலினை சமநிலையில் பராமரிக்கவும் உதவும். இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளர் நீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் ஒரு விரல் நீளமுள்ள பட்டையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை இரவு தூங்கும் முன்பு குடித்து வருவது நல்ல பலனை கொடுக்கும்.

 

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Dr.Narmadha_BNYS பதிவைப் பகிர்ந்துள்ளார் (@dr.narmadha_)