ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலில் நடிகராக அறிமுகமானவர்தான் ஸ்ரீகாந்த். முதல் படமே இவருக்கு ஒரு பெரிய வெற்றியை பெற்று தந்தது. அதிலும் முதல் படத்திலேயே இளம்பெண்களின் நாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஒரு பிளேபாயாக, லவ்வர் பாயாக ஜொலித்து வந்த ஸ்ரீகாந்த் தொடர்ந்து மனசெல்லாம் என்ற படத்தில் மீண்டும் தன்னுடைய நடிப்பை நிரூபித்தார். ஒரு காதலன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கதாபாத்திரத்தில் மனசெல்லாம் படத்தில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். ஆனால் தொடர்ந்து அவருக்கு சொல்லும் படியாக எந்த பட வாய்ப்புகளும் பெரிய அளவில் பேசப்படவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பன் என்ற திரைப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகும் ஸ்ரீகாந்துக்கு எந்த படங்களும் பெரிதாக வரவில்லை. இப்படியான நிலையில் சமீபத்தில் ஸ்ரீகாந்த் போதை பொருள் விவகாரத்தில் போலீசில் மாட்டிக் கொண்டார். தற்போது அவர் சிறையில் உள்ள நிலையில் இவருடைய பேச்சு தான் அதிகமாக இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது. இப்படியான நிலையில் வலைப்பேச்சு அந்தணன் அளித்துள்ள பேட்டியில், “நான் தான் ஸ்ரீகாந்த்தின் சித்தப்பா என்னை புடிச்சி உள்ள போட்டு விசாரீங்கன்னு நிறைய பேர் சொல்றாங்க. நான் ஸ்ரீகாந்துக்கு சித்தப்பா இல்ல அவர் வேறு சமூகம் நான் வேறு சமூகம். நானும் அவரும் பேசி 20 வருஷம் ஆச்சி” என்று கூறியுள்ளார்.
