“தக் லைஃப்” படத்தில் கமலுக்கு பதிலா விஜய் சேதுபதி நடிச்சிருக்கலாம்… அவரு சொன்னது எல்லாமே பொய்… வெளுத்து வாங்கும் பிரபலம்..!!

By Soundarya on ஆனி 12, 2025

Spread the love

நடிகர் கமலஹாசன் – மணிரத்தினம் கூட்டணியில் உருவான படம் தான் தக் லைப். இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. படத்தில் திரிஷா, நாசர், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார், இந்த படம் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மணிரத்தினத்தின் மெட்ராஸ்  டாக்கீஸ் நிறுவனமும், கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களின் எதிர்பார்ப்புக்கு உலை வைக்கும் விதமாக படத்தின் ரிசல்ட் அமைந்துள்ளது.

   

இந்த படத்தை இணையவாசிகள் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் கமல், சிம்பு, திரிஷா ஆகியோர வைத்து மீம்களை உருவாக்கி வைரல் ஆக்கி வருகிறார்கள். படம் வெளியாகி ஏழு நாட்கள் ஆன நிலையில் இந்தியாவில் வெறும் 42 கோடி மட்டும் தான் இந்த படம் வசூலித்துள்ளது. இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி பேசுகையில், பொதுவாக ஒரு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் யாரும் உண்மையை பேச மாட்டார்கள். படத்தில் இல்லாததை கூட இருப்பது போல சொல்வார்கள். அந்த வகையில் தான் தக் லைப் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசியது எல்லாமே பொய்.

   

 

நாயகனை விட சிறந்த படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறோம் என்று சொன்னார். ஆனால் நாயகன் படத்தில் இருந்த நேர்மை 10% கூட இந்த படத்தில் கிடையாது. அது மட்டும் இன்றி அன்பான மனைவி இருக்கும் போது இந்த வயதில் இவருக்கு சின்ன வீடு வைத்திருக்கிறார் என்பதை ரசிகர்கள் ஏற்கவே இல்லை. அதுதான் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இந்த கதையில் விஜய் சேதுபதி போன்ற ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் கமல் நடித்தது பெரிய தவறு. அவரின் கதாபாத்திரம் நன்றாகவே இல்லை” என்று பேசி உள்ளார்.