ஹார்முஸ் நீரிணையைக் கூட்டாக நிர்வகிப்பது தொடர்பாக ஈரானுடன் ஓமன் நாடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓமனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் விவகாரத்தில் ஓமன் தலையிட்டால் அந்நாட்டின் மீதும் குண்டுகள் வீசப்படும் என எச்சரித்துள்ள டிரம்ப், அதேவேளையில் அமெரிக்கா ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைமுறையிலிருந்த 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் நிறைவடையும் இந்த முக்கியமான தருணத்தில், டிரம்பின் இந்த அதிரடிப் பேச்சு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
