நாங்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட கட்சியையோ, அரசியல் தலைவரையோ ஆதரிப்பதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாங்கள் ராமர் கோவிலை கட்ட விரும்பினோம். அதனால்தான் பாஜகவை ஆதரித்தோம். ஒருவேளை காங்கிரஸ் கட்சி ராமர் கோவிலை கட்ட விரும்பு இருந்தால் அந்த கட்சியை ஆதரித்து இருப்போம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கொள்கைக்கு தான் ஆதரவு கட்சிக்கு இல்லை என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனால் அவர் பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
