திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகல்?… சற்றுமுன் திருமாவளவன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on ஐப்பசி 19, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறினால் இதை தீபாவளியாக கொண்டாடுவார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு நேர் எதிராக இருக்கும் ஒரே கட்சி என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணி வலுவாக இருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய காரணம். இதை உடைக்க வேண்டும் என திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை செயல்படுவது போல் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.