Connect with us

சொன்னது சொன்னபடியே நடக்கும்… ‘தளபதி 68’ குறித்து நாளை வெளியாகவுள்ள சூப்பரான அப்டேட்…

CINEMA

சொன்னது சொன்னபடியே நடக்கும்… ‘தளபதி 68’ குறித்து நாளை வெளியாகவுள்ள சூப்பரான அப்டேட்…

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சக்க போடும் போட்டு வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் 148.5 கோடி வசூலித்து இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது 4 நாட்களில் 400 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

   

இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 வேலைகள் தொடங்கபட்டது. அதன்படி விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சவுதர் கலிபோர்னியா இன்ஸ்டியூட்டா ஃபார் க்ரியேட்டிவ் டெக்னாலஜி சென்டருக்கு சென்று சென்னைக்கு திரும்பினர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்று முடிந்தது.

லியோ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ‘தளபதி 68’ அப்டேட்களை படக்குழு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் நாளை மதியம் 12.05 மணிக்கு படத்தின் முக்கிய பூஜை வீடியோவுடன் ,படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றியும் வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனை தற்பொழுது தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த அறிவிப்பு…

Continue Reading
To Top