‘எங்களுக்கு திருமணம் ஆயிடுச்சி!’…. உண்மையை கூறிய ‘மாரி’ பட இயக்குனர்!…. மணமகள் இந்த பிரபல நடிகையா?…

By Begam

Published on:

இயக்குனர் பாலாஜி மோகன் நடிகை தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் நேரடியாக அறிவித்துள்ளார்.

நடிகை தன்யா பாலகிருஷ்ணன் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தமிழைத் தவிர இவர் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் தற்பொழுது அதிக திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

   

இவரும் இயக்குனர் பாலாஜி மோகனும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குனர் பாலாஜி மோகன் வாயை மூடி பேசவும், காதலில் சொதப்புவது எப்படி?, மாரி,  மாரி 2 போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர்.

இந்நிலையில் நடிகை கல்பிகா கணேஷ் நடிகை தன்யா பாலகிருஷ்ணனும், இயக்குனர் பாலாஜி மோகனும் திருமணம் செய்து கொண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிவிட்டதாகவும், இவர்கள் திருமணத்தை மறைத்து வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறிய தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து முதல் முறையாக இணையத்தில் பேட்டி அளித்துள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன். இதில் அவர் தன்யா பாலகிருஷ்ணனை தன்னுடைய மனைவி என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். மேலும் தங்களுடைய சொந்த வாழ்க்கை குறித்து அவதூறு பரப்ப எவருக்கும் உரிமை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திருமணமாகி 11 மாதங்கள் ஆன பின்னர் பாலாஜி மோகன் மற்றும் தனியா பாலகிருஷ்ணனின் திருமண தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.