அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொருளாதார நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ள நிலையில், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் என ஈரான் உறுதியாகத் தெரிவித்துள்ளது. தரை, கடல், வான் மற்றும் இணையவெளி ஆகிய அனைத்து தளங்களிலும் தங்கள் படைகள் முழுச் தயார்நிலையுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான், தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் பொருளாதாரத் தடைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் அனைத்தும் முற்றிலுமாகத் தோல்வியடையும் என்றும் ஈரான் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
