போன் ஹேங் ஆகுதா…? மொபைல் ஸ்டோரேஜ் ஃபுல்லா…? சில நிமிடங்களில் 10GB இடத்தை காலி செய்ய சூப்பர் டிப்ஸ்…!!

Spread the love

ஸ்மார்ட்போன்களில் இடவசதி குறைவதற்குப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டுமே காரணமல்ல. செயலிகளின் பின்னணியில் சேமிக்கப்படும் ‘கேச்’ கோப்புகளும் முக்கியக் காரணியாகும். இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் போது அவை தற்காலிகமாகச் சேமித்துக்கொள்ளும் தரவுகளைச் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று அவ்வப்போது நீக்க வேண்டும். அதேபோல், வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற குழுக்களில் இருந்து வரும் அதிகப்படியான கோப்புகளை ‘மேனேஜ் ஸ்டோரேஜ்’ வசதி மூலம் அகற்றுவதும், தானியங்கிப் பதிவிறக்கத்தை முடக்கி வைப்பதும் போனின் வேகத்தை அதிகரிக்கவும் அதிக இடத்தைக் காலி செய்யவும் உதவும்.

மொபைலில் இருந்து நீக்கப்பட்ட கோப்புகள் உடனடியாக அழிந்துவிடாமல் Trash அல்லது ‘பின்’ பகுதியில் தங்கியிருக்கும் என்பதால், அங்கேயும் சென்று அவற்றை முழுமையாக அப்புறப்படுத்துவது அவசியமாகும். மேலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட பழைய பிடிஎஃப்  கோப்புகள் மற்றும் பயன்படுத்தாத செயலிகளை அடையாளம் கண்டு நீக்குவதன் மூலம் 10ஜிபி வரை கூடுதல் இடத்தைப் பெற முடியும். கூகுள் ஃபைல்ஸ் (Files by Google) போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மாதத்திற்கு ஒருமுறை கைபேசியைச் சீரமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், மொபைல் ஹேங் ஆகாமல் நீண்ட காலம் மென்மையாகச் செயல்படும்.

Devi Ramu

Recent Posts

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

21 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

31 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

36 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

42 minutes ago