பர்சனல் லோன் அவசரப்பட்டு வாங்கிட்டீங்களா…? கவலைப்படாதீங்க…. கடனை ரத்து செய்ய வழிகள்…!!

By Devi Ramu on மார்கழி 20, 2025

Spread the love

அவசரப்பட்டு தனிநபர் கடன் வாங்கிவிட்டு வருந்துபவர்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி ‘கூலிங் ஆஃப்’ எனும் அரிய வாய்ப்பை வழங்குகிறது. கடன் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு வந்த பிறகு, அதன் வட்டி அதிகம் என்றோ அல்லது தற்போது அந்த பணம் தேவையில்லை என்றோ நீங்கள் கருதினால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை ரத்து செய்யலாம்.

டிஜிட்டல் முறையில் கடன் வாங்குபவர்களுக்கு குறைந்தது ஒரு நாள் அவகாசம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என விதிகள் உள்ளன. இந்த சலுகை மூலம் அதிகப்படியான அபராத கட்டணங்கள் இன்றி, மிகக் குறைந்த நிர்வாக செலவில் உங்கள் கடன் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

   

இந்த கால அவகாசத்திற்குள் கடனை ரத்து செய்ய விரும்பினால், வாங்கிய அசல் தொகையோடு அந்த சில நாட்களுக்கான வட்டியை மட்டும் செலுத்தினால் போதுமானது. முன்கூட்டியே கடனை முடிப்பதற்கான (Foreclosure) கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது என்பது கடனாளிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது.

   

இருப்பினும், கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒருமுறை மட்டும் வசூலிக்கப்படும் சிறிய அளவிலான ‘பிராசஸிங்’ கட்டணத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்த எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிப்பது அவசியம். அவசர முடிவுகளால் நிதி நெருக்கடியில் சிக்காமல் இருக்க இந்தத் திட்டம் ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகிறது.