மக்கள் பணம் என்ன இலவசமாகவா வருகிறது…? பெட்ரோலில் கலந்த தண்ணீர்… 1100 ரூபாய் இழப்பால் நிதின் கட்கரிக்கு நெட்டிசன் கேள்வி…. அதிர்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 1, 2026

Spread the love

சமூக வலைத்தளப் பயனர் ஒருவர், தனது அவசரத் தேவைக்காக மூன்று நாட்களுக்கு முன்பு 800 ரூபாய்க்குத் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பியுள்ளார். தினமும் கடைக்குச் செல்ல 4 முதல் 5 கிலோமீட்டர் மட்டுமே பைக்கை பயன்படுத்தும் நிலையில், திடீரென ஒருநாள் மதியம் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் நின்றுள்ளது. எவ்வளவோ முயன்றும் வண்டி இயங்காததால், வேறு வழியின்றி பைக்கை மெக்கானிக் ஷாப்பிற்குத் தள்ளிச் சென்று சோதித்துப் பார்த்துள்ளார்.

அங்கு பரிசோதித்த மெக்கானிக், பெட்ரோல் டேங்கில் பெட்ரோலை விடத் தண்ணீரே அதிகமாகக் கலந்திருப்பதாகக் கூறி, அந்தப் பெட்ரோல் வீணாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனால் பெட்ரோல் டேங்கை சுத்தம் செய்ய 300 ரூபாயும், மீண்டும் புதிதாகப் பெட்ரோல் போட 800 ரூபாயும் என மொத்தம் 1100 ரூபாய் வீணாகச் செலவானதாக அவர் புலம்பியுள்ளார். பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதால் தான் இப்படி நடக்கிறதா எனத் தெரியவில்லை என்று கூறிய அவர், மக்கள் பணம் வீணாவதைக் சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.