மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் முன்பதிவு செய்து இருந்த 600 கோடிக்கும் அதிகமான பணத்தை இண்டிகோ நிறுவனம் திரும்ப வழங்கியது. இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வதோதராவிற்கு புறப்பட இண்டிகோ விமானம் ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று புறா ஒன்று விமானத்திற்குள் நுழைந்தது. அந்த புறா விமானத்தில் உள்ளே நுழைந்ததும் எப்படி வெளியில் செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது.
புறா விமானத்தின் உள்ளே நுழைந்ததை பார்த்த பயணிகள் அனைவரும் வாயடைத்து போயினர். அந்த புறாவை பிடிப்பதற்கு பணிப்பெண்களும் ஊழியர்களும் அங்கும் இங்கும் ஓடினர். இதனால் பயணிகள் அனைவருக்கும் புறா தண்ணி காட்டி அங்கும் இங்கும் பறந்தது. விமான பணி பெண்களோடு சேர்ந்து சில பயணிகளும் அந்த புறாவை பிடிக்க முயன்றனர். விமான ஊழியர்கள் புறாவை ஓடி ஓடி பிடிக்க முயற்சி செய்ததை பயணிகள் தங்களுடைய மொபைல் ஃபோனில் வீடியோ எடுத்தனர். ஒருவடியாக போராடி புறாவை பிடித்து வெளியே விட்டனர். அதன் பிறகு விமானம் அங்கிருந்து புறப்பட்டது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக புதுச்சேரியில் TVK சார்பில் கோரப்பட்ட பேரணிக்கு (roadshow) அனுமதி மறுக்கப்பட்டு, திறந்தவெளி பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு…
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020…
விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம்…
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு…
மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு பணியில் உறைந்து ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…