‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் ரோலக்ஸ் ரோலில் சூர்யாவுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகரா?… அப்படியா?… வைரலாகும் தகவல் இதோ…

By Begam on தை 19, 2023

Spread the love

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் வெளிவந்த ‘விக்ரம்’ திரைப்படம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களை திரையுலகில் கொடுத்துள்ளார். இவர் தற்பொழுது இளைய தளபதி விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை எடுக்கவுள்ளார். இத்திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

   

   

இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘விக்ரம்’. இத்திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து அசத்தியிருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது. மேலும் வசூலில் 400 கோடியையும் கடந்து சாதனை படைத்தது.

 

இவ்வாறு சூப்பர் ஹிட்டான இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஏற்று நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் தான் மிக முக்கியமானது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் என்றே கூறலாம். அப்படிப்பட்ட இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க லோகேஷ் கனகராஜ் நடிகர் சூர்யாவை அணுகவில்லையாம் .அவர் அணுகிய பிரபல நடிகர் யார் தெரியுமா? அவர் பேருமே யாரும் இல்லை நடிகர் சியான் விக்ரம் தான்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முதலில் நடிகர் சியான் விக்ரமை ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் ஏற்று நடிக்க அழைத்தாராம். ஆனால் கதாபாத்திரத்தின் நீளம் குறைவாக இருக்கிறது என்று கூறி நடிகர் விக்ரம் நடிக்க மறுத்த காரணத்தினால் நடிகர் சூர்யா இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.