தன்னைப் போலவே ட்ரஸ் அணிந்திருந்த தொகுப்பாளினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா?… ரசிகர்கள் விமர்சனம்!

By vinoth on பங்குனி 20, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஐயா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா அதன் பிறகு சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்ததன் மூலம் உடனே முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றார்.

சிம்புவுடன் அவர் நடித்த வல்லவன் திரைப்படம் அவரை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது. அவருடனான காதல் மற்றும் முத்தக் காட்சிகள் இணையத்தில் வெளியானது எல்லாம் அவரைச் சுற்றி ஒரு சர்ச்சை வளையத்தை உருவாக்கின. அது அவரின் சினிமா கேரியருக்கு மிகப்பெரிய அளவில் உதவியது.

   

அதன் பின்னர் சிம்புவை பிரிந்த அவர் பிரபுதேவாவைக் காதலித்து அவரோடு ஒன்றாக வாழ்ந்தார். அப்போது பிரபுதேவாவுக்குக் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தன. ஆனாலும் அது தெரிந்தும் நயன்தாரா அவரைக் காதலித்தார். பிரபுதேவா, நயன்தாராவைத் திருமணம் செய்த்கொள்வதற்காக தன் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.

   

இது சம்மந்தமாக அப்போது நயன்தாரா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதன்பின்னர் பிரபுதேவாவுடனான காதலும் பிரிந்து இயக்குனர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்துகொண்டு தற்போது நடிப்பிலும் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

 

பிரபு தேவாவுடனான காதல் முறிவுக்கு வந்தபோது நயன்தாரா விரக்தியில் இனிமேல் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்து மும்பையில் போய் வசித்தார். அங்கேயே செட்டில் ஆகிவிடும் எண்ணத்திலும் இருந்தார். அப்போது அவரை சந்தித்து அவரிடம் ‘ராஜா ராணி’ படத்தின் கதையை சொல்லி அவரின் மனதை மாற்றி மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் அட்லிதான். அதன் பின்னர் அவரின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவுக்கு உச்சத்துக்கு சென்றார்.

இந்நிலையில் அவர் பற்றி தற்போது ஒரு எதிர்மறையான சம்பவம் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் தொகுப்பாளர் டிடி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “நான் ஒரு நடிகையை நேர்காணல் செய்ய சென்றிருந்தேன். அப்போது நானும் அவர் அணிந்திருந்தது போலவே உடையணிந்திருந்தேன். அதைப் பார்த்த அவர் ‘நீங்கள் வேறு ஆடை அணிந்துகொள்ள முடியுமா?” எனக் கேட்டார். என்னிடம் அப்போது வேறு ஆடை எதுவும் இல்லை. அவர் அப்படி சொன்னது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் டிடி அந்த நடிகை யார் என்று சொல்லவில்லை என்றாலும் அது நயன்தாராதான் என்றும், இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் ஒரே நிறத்தில் சேலை அணிந்து கலந்துகொண்ட நேர்காணல் நிகழ்ச்சியின் புகைப்படங்களைப் பகிர்ந்தும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.