தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி மற்றும் குருவை சாகுபடி பாதிப்புகள் காரணமாக, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை அரசு உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போதைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் வலுப்பெற்றுள்ளது.
ஏற்கெனவே விவசாயிகள் சங்கத் தலைவர் பெ. சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த காலங்களில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது போல, தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க இந்த நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பும் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
