ஸ்டாலின் கைக்கு வந்த ரிப்போர்ட்… விஜய் – இபிஎஸ் கூட்டணி…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 23, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்று வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விஜய்யை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இறங்கியுள்ளதால் விஜய் யார் பக்கம் செல்வார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அதே சமயம் சமீபத்தில் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் மறைமுகமாக கூறியிருந்தது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பெரும்பாலானோர் தமிழக வெற்றி கழகம் விஜய்க்கு வாக்களிக்க இருப்பதாக ஒரு ரிப்போர்ட் கிடைத்துள்ளது. ஆனால் தமிழக வெற்றிக்கழகம் கட்சி அதிமுக அல்லது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அந்த ஓட்டுகள் அப்படியே திமுகவுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவின் அடித்தளமாக இருக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்கு விஜய்க்கு செல்லாமல் இருந்தால் அது திமுகவுக்கு தான் லாபம் என தகவல் வெளியாகியுள்ளது.