“ஏன்டா எங்க வந்து யாரை பத்தி பேசுற” சீமான் கூட்டத்தில் TVK தொண்டர் செய்த காரியம்… வெளுத்து வாங்கிய நாதகவினர்..!!

By Soundarya on சித்திரை 6, 2026

Spread the love

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இன்று (ஏப்.6) சீமான் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்துத் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த தவெக தொண்டர்கள் சிலர், தங்கள் கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு (TVK) கோஷமிட்டதோடு, சீமானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சீமான், மேடையிலிருந்தே அந்த நபர்களுடன் காரசாரமான வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் தவெகவினரைத் தாக்கத் தொடங்கியதால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. மோதல் தீவிரமடைந்ததை அடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.