சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காகவும், அதிகமான பார்வைகளைப் பெறுவதற்காகவும் இளைஞர் ஒருவர் போலி டி.டி.இ வேடமிட்டு பயணிகளிடம் பணம் வசூலித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவம் குப்தா என்ற வீடியோ வ்லாகர், பீகார் மாநிலம் பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்தில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். டி.டி.இ போன்ற சீருடையை அணிந்துகொண்டு அவர் செய்த இந்தச் சோதனையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், சிவம் குப்தா பாட்னா ரயில் நிலையத்திற்குள் டி.டி.இ உடையில் சுற்றித் திரிவதோடு, அங்கு நிஜமான டி.டி.இ-க்களும் ரயில்வே போலீசாரும் இருந்ததால் தனக்கு ஆரம்பத்தில் பயமாக இருந்ததாகக் கூறுகிறார். இருப்பினும், அவரது தோற்றத்தை உண்மை என்று நம்பிய பல பயணிகள் அவரிடம் டிக்கெட் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட அவர், சில பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை என்ற பெயரில் ரூ.200 முதல் ரூ.500 வரை சட்டவிரோதமாகப் பணம் வசூலித்துள்ளார். ஒரு நாள் முழுவதும் இவ்வாறு செய்து தான் மொத்தம் ரூ .1200 சம்பாதித்ததாக அந்த வீடியோவின் முடிவில் அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசு அதிகாரியைப் போலத் தவறான அடையாளத்தைக் காட்டி ஏமாற்றுவதும், பாதுகாப்பு நிறைந்த ரயில் நிலையத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதும் மிகப்பெரிய சட்ட மீறல் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டுள்ளது. தானாபூர் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் இந்த விவகாரத்தைக் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளதுடன், வீடியோ குறித்து முழுமையான விசாரணை நடத்தி அந்த வ்லாகர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…