நான் உண்மையில் எம் ஆர் ராதாவின் மகன்… ஆனால் வி கே ராமசாமியின் மகனாக வளர்ந்தேன்… பிரபலம் சொன்ன தகவல்!

By vinoth on மாசி 4, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கு முன்னோடி இல்லாத நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மேடை நாடகத்தில் முடி சூடா மன்னனாக விளங்கியவர். 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.

   

எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக உருவாகி வந்த காலத்தில் கூட அவர்களுக்காக பணிந்து போகாதவர் எம் ஆர் ராதா. இருவரும அவரை மரியாதையோடு “அண்ணே” என்றுதான் அழைப்பார்கள்.

   

எம் ஆர் ராதா, ஐந்து பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தவர். அது மட்டுமில்லாமல் பல பெண்களோடு திருமணம் செய்துகொள்ளாமலேயேயும் வாழ்ந்தவர். இதனால் எம் ஆர் ராதாவுக்குக் கணக்கற்ற வாரிசுகள். அதில் சிலர் இப்போதும் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறியப்பட்ட VKR ரகு என்பவர் தானும் எம் ஆர் ராதாவிற்குப் பிறந்தவர்தான் எனக் கூறியுள்ளார். அதில் “நான் எம் ஆர் ராதாவுக்குப் பிறந்தவன். ஆனால் என் அம்மாவும் அப்பாவும் அவர் சிறைக்கு செல்வதற்கு முன்பே பிரிந்துவிட்டனர். அதனால் என் அம்மாவை வி கே ராமசாமி அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் அவர் என்னை தன் மகனாகவே வளர்த்தார். எனக்கு அவரின் சொத்துகளில் பங்குகளைக் கொடுத்தார். எனக்கு சிறுவயதில் எம் ஆ ராதாதான் என் அப்பா என்பதே தெரியாது” எனக் கூறியுள்ளார்.