களத்தில் நிற்காமல் ஓடிப்போய் ஒழிஞ்சிகிட்டீங்களே… உங்களுக்கு எதற்கு அரசியல்…? விஜய்யை விமர்சித்த ஷாநவாஸ்..!!

By Soundarya on புரட்டாதி 28, 2025

Spread the love

கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது “களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒளிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம். நெருக்கடிகள், துயரங்கள், சவால்களை எதிர்கொள்வதே அரசியல். அந்த துணிவு சிறிதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்? என்று பதிவிட்டுள்ளார்.