திடீர் திருப்பம்…. அக்டோபர் 1-ல் மதுராந்தகத்தில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்… விஜய்யின் மெகா பிளான்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

Spread the love

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இத்தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், சத்யபாமா தாராபுரத்திலும் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி நிலவுவதால், வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் பெரும் எதிர்பார்ப்பும் சுவாரசியமும் நிலவி வருகிறது.

ஏற்கெனவே மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 25-ஆம் தேதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 30-ஆம் தேதியான நாளை தாராபுரத்தில் சத்யபாமாவை ஆதரித்து அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். இச்சூழலில், ஒவ்வொரு தொகுதியிலும் கூடுதல் ஒருநாள் பரப்புரை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மதுராந்தகத்தில் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் குறித்த அதிரடி அறிவிப்பை தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதோடு, மாநிலத்தின் மதச்சார்பற்ற தன்மையையும் சமூக நீதியையும் பாதுகாக்கும் நோக்கில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ அமைக்கப்பட்டுள்ளதாக தவெக தெரிவித்துள்ளது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தோழமைக் கட்சிகளின் ஒருங்கிணைப்பில் இந்த வெற்றிப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வரும் அக்டோபர் 1-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மதுராந்தகம் ஹோட்டல் ஹைவே இன் அருகில் மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிக்கவுள்ளனர்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago