Connect with us

‘என்னோட பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படித்தான் இருக்கும்’… விஜே ரம்யா வெளியிட்ட வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்…

CINEMA

‘என்னோட பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படித்தான் இருக்கும்’… விஜே ரம்யா வெளியிட்ட வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்…

 

விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் முன்னணி தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் ரம்யா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

   

இவருடைய நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்பொழுது இவர் தனியார் நிகழ்ச்சிகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்றவற்றை மட்டும் தான் தொகுத்து வழங்கி வருகின்றார். இதை தாண்டி ரம்யா மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இறுதியாக விஜயின் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியிருந்தார். இவர் சினிமாவை தாண்டி பளு தூக்கு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் விஜே ரம்யா.

இவர் தற்பொழுது வாரணாசியில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவினை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

Continue Reading
To Top