20 பேர வச்சி ஒரு ஷோவை ஒழுங்கா நடத்த தெரியலை, இவரெல்லாம் CM ஆக ஆசைப்படலாமா.. கமலை விளாசிய VJ வைஷூ..

By admin on கார்த்திகை 22, 2023

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிரதீப் ஆண்டனி ரெட்கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதிலிருந்து பிக்பாஸ் குறித்த கடுமையான விமர்சனங்களை பலரும், சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் விஜே வைஷூ, பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். சமீபத்திய அவர் நேர்காணலில் வைஷூ பேசியதாவது, மாயா மீது 2018ல் இருந்தே ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. புதிதாக நான் எதையும் சொல்லிவிடவில்லை. மாயாவை பற்றி பேசியதற்காக சிலர் என்னை போனில் மிரட்டுகின்றனர். அதுபற்றி எனக்கு கவலையில்லை. ஒருவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரை பற்றிய உண்மைகளை தான் பேச முடியும்.

Kamal Haasan

   

பிக்பாஸ் வீட்டில், டைட்டில் வின்னராக வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளர் பிரதீப்பை கமல் அநியாயமாக ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றினார். 20 பேர் மட்டுமே இருக்கிற ஒரு சபையை, ஒரு பிக்பாஸ் ஷோவை சரியாக நிர்வகித்து, ஒழுங்காக நடத்த தெரியாத கமல், கட்சி நடத்துகிறார். தமிழ்நாட்டுக்கு முதல்வராக ஆசைப்படுகிறார். இந்த மோசமான மனிதரை நம்பி தமிழ்நாட்டை ஒப்படைத்தால் அவ்வளவுதான். பூர்ணிமா, மாயா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் லவ் பண்ணுகின்றனர். இந்த அசிங்கத்தை ஊரே திட்டுகிறது. மாயா எலிமினேட் ஆகி விட்டால், பூர்ணிமா வீட்டுக்குள் இருக்க மாட்டார். அவரே வெளியேறி விடுவார். மாயா இல்லாமல், பூர்ணிமாவால் இருக்கவே முடியாது.

   

Kamal Haasan

 

பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான்கான், நாகார்ஜூனா போன்றவர்கள் மிக சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஒய்டு கார்டு முறையில் திருநங்கைகளுக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை. விசித்ரா சொன்ன நிக்ஸன் குறித்த புகார்கள், தவறுகள் குறித்து கமல் கேள்வி கேட்டால், அடுத்து பிரதீப் பற்றிய பேச்சு வரும். அது மாயா பக்கமாக திரும்பும். அடுத்து அது கமலுக்கும், மாயாவுக்கும் உள்ள நட்பை பற்றி பேச வைக்கும் என்பதால்தான், கமல் நிக்ஸன் விஷயத்தில் பேசாமல் தவிர்த்தார். சமூகம் மீது எந்த அக்கறையும் இல்லாதவர் கமல். இவரால், பிக்பாஸ் நிகழ்ச்சியையே ஒழுங்காக நடத்த முடியவில்லை. இந்த நிகழ்ச்சி படுகேவலமாக இருப்பதால்தான் கமல் மீது விமர்சனம் எழுகிறது என, கூறியிருக்கிறார் விஜே வைஷூ.