விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஷோக்களில் ஆங்கராக பணிபுரிந்து பிரபலம் அடைந்தவர் VJ ரக்சன். இவர் தற்போது ரஜினிகாந்த் உடன் இணைந்து படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அது பற்றி ரக்சன் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
ஆங்கராக பணிபுரிந்து வெள்ளித்திரையில் அறிமுகமான ரக்சன், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ள ரக்சன் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கனகவேல் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் ரக்சன் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஹீரோவாக நடிக்க இரண்டு படங்கள் வந்த நிலையிலும் அதை தவிர்த்து விட்டு தலைவர் ரஜினிகாந்த் உடன் நடிப்பதையே முக்கியம் என்று இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் நீங்கள் என்ன நேரம் சொன்னாலும் பரவாயில்லை; தேதி சொன்னாலும் பரவாயில்லை நான் வருகிறேன் என்றும் எனக்கு அவருடன் நடிப்பதே போதும் என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் VJ ரக்சன்.
பிரபல நடிகரான ரமேஷ் கண்ணா விக்ரமன் இயக்கத்தில் ரிலீசான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற திரைப்படம் மூலமாக திரை உலகில்…
கடந்த 1940 முதல் 1980 வரை தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன். இவர் எம்ஜிஆர்,…
நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு…
நடிகை ராசி கண்ணா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்…
இந்திய பணக்காரர்களிலேயே டாப் 5 லிஸ்டில் இருக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் அரியவகை மாட்டின் பாலை தான் குடிப்பார்களாம். இது…
பிரபல தொகுப்பாளரான கமல் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒளிபரப்பான கொஞ்சம் காபி நிறைய சினிமா என்ற ஷோ மூலமாக முதன்…