ரஜினிகாந்த் படத்தில் சின்ன ரோலில் நடிக்க, ஹீரோ வாய்ப்பையே விட்டுட்டு வந்த விஜய் டிவியின் செல்லப் பிள்ளை..

By Mahalakshmi

Updated on:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஷோக்களில் ஆங்கராக பணிபுரிந்து பிரபலம் அடைந்தவர் VJ ரக்சன். இவர் தற்போது  ரஜினிகாந்த் உடன் இணைந்து படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அது பற்றி ரக்சன் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

   

ஆங்கராக பணிபுரிந்து வெள்ளித்திரையில்  அறிமுகமான ரக்சன், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ள ரக்சன் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன்  திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில்  கனகவேல் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் ரக்சன் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். மேலும்  இந்த திரைப்படத்தில்  நடிப்பதற்காக ஹீரோவாக நடிக்க இரண்டு படங்கள் வந்த நிலையிலும் அதை தவிர்த்து விட்டு தலைவர் ரஜினிகாந்த் உடன் நடிப்பதையே முக்கியம்  என்று  இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில்  நீங்கள் என்ன நேரம் சொன்னாலும் பரவாயில்லை; தேதி சொன்னாலும் பரவாயில்லை நான் வருகிறேன் என்றும் எனக்கு அவருடன் நடிப்பதே போதும் என்று  அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் VJ ரக்சன்.

author avatar
Mahalakshmi