தொகுப்பாளினி பிரியங்கா, ஷோவில் யார் தன்னை எவ்வளவு தான் கலாய்த்தாலும் அதை சிறிதும் பெருசு படுத்தாமல் நகைச்சுவையோடு சிரித்து மக்களையும் சிரிக்க வைப்பவர். இதனாலே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். தற்போது விஜய் டிவியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம், ஸ்டார்ட் மியூசிக், இசை போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். பிரியங்கா சன் டிவி, சுட்டி டிவி, ஜீ தமிழ், ஸ்டார் விஜய் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றிய தன் மூலம் 2016 ம் ஆண்டு சிறந்த பெண் தொகுப்பாளரான “ஆனந்த விகடன் சினிமா விருதுகளை” பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல விருதுகளை பிரியங்கா தொகுப்பாளராக பணிபுரிந்ததன் மூலம் பெற்றுள்ளார். இதனால் இவரை தொலைக்காட்சியின் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடப்படுகிறார். டிவி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவதை தவிர பிரியங்கா YouTube சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் அவர் மக்களை மெய்நிகர் கவரேஜில் மகிழ்விப்பார். இந்த சேனலில் 1.38 மில்லியன் சப்ஸ்கிரைபர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரியங்காவிற்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகின. இந்த நிலையில் பிரியங்கா கடந்த 2023 ல் சூட்டிங் ஸ்பாட்டில் ரேடியோ செட் தடுக்கி கீழே விழுந்தார். அதில் அவரது தாடையில் அடிபட்டு இருந்தது, இதனை தனது YouTube ல் பதிவிட்டிருந்தார்.
2023 இறுதியில் விழுந்ததால் அவரது நண்பர்களை எல்லாம் வரவைத்து 2024 புத்தாண்டை கொண்டாடியதையும் YouTube சேனலில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரியங்கா நிகழ்ச்சிக்கு போகும் போது அந்த காயத்தை மறைப்பதற்கான மேக்கப் போடுவதையும் வீடியோ மூலம் YouTube சேனலில் பதிவிட்டுள்ளார்.