விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள். அதன்படி ஒரு காலத்தில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாலினிகளில் ஒருவராக இருந்தவர்தான் பாவனா. இவர் ரேடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதன்முதலில் ராஜ் டிவியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு தான் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பிரபலமானார். இதில் இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். அதோடு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிறகு இவர் இந்தியாவின் பிரபலமான விளையாட்டு பத்திரிகைகளில் ஒருவராக மாறினார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஐபிஎல், உலகக் கோப்பை டி20 மற்றும் கால்பந்து போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். அது மட்டுமல்லாமல் சினிமா தொடர்பான ஆடியோ வெளியீட்டு விழாக்களையும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் பாவனா பிரபல யூட்யூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் ஒரு சூப்பரான கேரக்டர் கொண்டவர். அவர் எல்லார்கிட்டயும் சகஜமா தான் பேசுவாரு. 15 வருஷத்துக்கு முன்னாடி அவர் கூட சேர்ந்து VJ ஆக பணியாற்றி இருக்கேன். இன்னும் என்ன மறக்காம அதே நட்போடு பழகிக்கொண்டு இருக்காரு. நான் ஆரம்பத்துல விஜே வாக உள்ள நுழைந்த சமயத்தில், நீ எவ்வளவு நாள் வேலை பாக்க போற என்ற என்கிட்ட எல்லாம் கேட்டாங்க. அப்போ நான் 33 வயசு வரைக்கும் பாப்பேன் அதுக்கப்புறம் இதுல இருந்து விலகிக்குவேன் என்று 28 வயசுல சொன்னேன். அதுக்கப்புறம் 30 வயசு ஆகும்போது இன்னும் மூணு வருஷம் இருக்கு பாத்துக்கலாம் என்று நினைத்தேன்.
எனக்கு இன்னும் சில மாதத்தில் 40 வயசு ஆகப்போகுது. நான் இன்னும் ஆங்கரா வேலை செஞ்சுட்டு இருக்க ரெண்டு காரணம் இருக்கு. அது என்னவென்றால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நான் நன்றாக இருக்கிறேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தனோ அதே மாதிரி தான் இப்பவும் இருக்கேன். இதுக்காக தனியா நான் ஒர்க் அவுட் எதுவும் பண்ணல மெண்டலி தயாராக மருந்து எதுவும் எடுத்துக்கல. காலத்துக்கு ஏத்த மாதிரி நம்ப திறமையை வளர்த்துக்கணும். இது மட்டும் இருந்தா போதும் வயசு எல்லாம் ஒரு காரணமா நம்ப பார்க்க கூடாது. என்னோட வயசு வெளில சொல்றதுல எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை என்று பாவனா வெளிப்படையாக பேசியுள்ளார்.