Connect with us

கையில் மாவு கட்டுடன் வீடியோ வெளியிட்ட விஜே அஞ்சனா.. பதறிப்போன ரசிகர்கள்.. இவருக்கு என்ன ஆச்சு..?

CINEMA

கையில் மாவு கட்டுடன் வீடியோ வெளியிட்ட விஜே அஞ்சனா.. பதறிப்போன ரசிகர்கள்.. இவருக்கு என்ன ஆச்சு..?

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தான் அஞ்சனா. அதே தொலைக்காட்சியில் பல வருடமாக பணியாற்றி லைவ் ஷோக்கள், இசை வெளியீட்டு விழா மற்றும் பிரபலங்களின் நேர்காணல்கள் என பலவற்றில் இவர் ஆன்கர் ஆக மாறினார். அது மட்டுமல்லாமல் இவருக்கு திறமையானவர்களுக்கு வழங்கப்படும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கயல் திரைப்படத்தில் நடித்த சந்திரன் என்பவரை தனது 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

குழந்தை பிறந்த பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து சற்று விலகி இருந்த இவர் மீண்டும் மீடியாவிற்குள் நுழைந்த youtube சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகின்றார். இவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்த போதும் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார். இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ சூட் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

   

 

இந்த நிலையில் அஞ்சனா எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் இவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அது அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு சென்றுள்ளது. இது குறித்து மருத்துவமனையில் இருந்தபடி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் குணமடைய அவருக்கு தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Anjana Rangan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anjana_rangan)

author avatar
Nanthini

More in CINEMA

To Top