#image_title
விவேக் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்தவர் விவேக். தனது கல்லூரி படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து முடித்தார். சிறுவயதிலேயே முறைப்படி பரதநாட்டியம் பயின்று தேர்ச்சி பெற்றவர் விவேக். அதுமட்டுமல்லாமல் ஆர்மோனியம் வயலின் தபேலா போன்ற இசை கருவிகளையும் அருமையாக வாசிக்க கூடியவர்.
தனது சகோதரியுடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடுவார் விவேக். அப்படி கலாஷேத்ரா பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அதன் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள சென்னை சென்றார் விவேக். அப்போது இயக்குனர் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். 1980 களின் இறுதிகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விவேக். புதுப்புது அர்த்தங்கள் மின்னலே பெண்ணின் மனதை தொட்டு ரன் நம்ம வீட்டு கல்யாணம் முதலிய படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நகைச்சுவை நடிகராக நடித்து அசத்தியிருப்பார் விவேக்.
விவேக்கின் நகைச்சுவைகள் எதார்த்தமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் ஊழல் மூட நம்பிக்கை மக்கள் தொகை பெருக்கம் சமூக நீதி கருத்துக்கள் போன்றவற்றை தனது நகைச்சுவை மூலமாகவே எடுத்துரைப்பவர் விவேக். மேலும் விவேக் APJ அப்துல் கலாமின் தீவிர Follower ஆவார். அவர் காட்டிய வழியை பின்பற்றி பல மரங்களை தான் இருக்கும் வரையிலும் நட்டு இருக்கிறார் விவேக். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை கூறுவதால் இவரை மக்கள் சின்ன கலைவாணர் என்று அழைத்தனர்.
நல்ல ஆரோக்கியமான மனிதராக படத்தில் நடித்து வந்த விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தற்காக மீடியா முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் விவேக். இவரது திடீர் மரணம் தமிழக மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் விவேக் இறந்துவிட்டார் என்று மக்கள் பேசினர். அந்த அளவுக்கு இவரது இறப்பு செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட பயந்து கொண்டிருந்த மக்களும் இவர் உயிரிழந்ததை தொடர்ந்து மிகவும் பயம் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு விவேக் அவர்களின் மனைவி ஒரு நேர்காணலில் தடுப்பூசி போட்டதால் தான் என் கணவர் இறந்து விட்டாரா என்பதை பற்றிய ஒரு விளக்கத்தை கூறியிருக்கிறார்.
விவேக்கின் மனைவி அருட்செல்வி இதைப்பற்றி கூறுகையில் என்னுடைய கணவர் மிகவும் ஹெல்த் கான்ஷியஸாக இருக்கக்கூடிய ஒரு நபர். வாக்கிங் யோகா, சாப்பாட்டுல டயட்னு கரெக்ட்டா இருப்பாரு. பார்த்து பார்த்து தான் எல்லாம் செய்வார். கொரோனா தடுப்பூசி போட்ட அன்னைக்கு கூட அவர் ரொம்ப நல்லாத்தான் இருந்தாரு. ஆனா மறுநாள் அவருக்கு இப்படி ஆகி அவர் இறந்து போவாருன்னு நாங்க யாருமே நினைக்கல. திடீர்னு அவருக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு இன்னைக்கு வரைக்குமே புரியல என்று விவேக் இறப்பு பற்றி உண்மையை உடைத்து பேசியிருக்கிறார் அருட்செல்வி.
தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் பத்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அக்ஷித், வெறும் 200 ரூபாய் மதிப்புள்ள அதிர்ஷ்டக்…
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…