vivekk

கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் அவர் இறந்தாரா…? உண்மையை உடைத்து பேசிய விவேக்கின் மனைவி அருட்செல்வி…

By admin on மார்கழி 17, 2024

Spread the love

விவேக் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்தவர் விவேக். தனது கல்லூரி படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து முடித்தார். சிறுவயதிலேயே முறைப்படி பரதநாட்டியம் பயின்று தேர்ச்சி பெற்றவர் விவேக். அதுமட்டுமல்லாமல் ஆர்மோனியம் வயலின் தபேலா போன்ற இசை கருவிகளையும் அருமையாக வாசிக்க கூடியவர்.

   

தனது சகோதரியுடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடுவார் விவேக். அப்படி கலாஷேத்ரா பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அதன் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள சென்னை சென்றார் விவேக். அப்போது இயக்குனர் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது படத்தில் டிக்க வாய்ப்பு கொடுத்தார். 1980 களின் இறுதிகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விவேக். புதுப்புது அர்த்தங்கள் மின்னலே பெண்ணின் மனதை தொட்டு ரன் நம்ம வீட்டு கல்யாணம் முதலிய படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நகைச்சுவை நடிகராக நடித்து அசத்தியிருப்பார் விவேக்.

   

விவேக்கின் நகைச்சுவைகள் எதார்த்தமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் ஊழல் மூட நம்பிக்கை மக்கள் தொகை பெருக்கம் சமூக நீதி கருத்துக்கள் போன்றவற்றை தனது நகைச்சுவை மூலமாகவே எடுத்துரைப்பவர் விவேக். மேலும் விவேக் APJ அப்துல் கலாமின் தீவிர Follower ஆவார். அவர் காட்டிய வழியை பின்பற்றி பல மரங்களை தான் இருக்கும் வரையிலும் நட்டு இருக்கிறார் விவேக். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை கூறுவதால் இவரை மக்கள் சின்ன கலைவாணர் என்று அழைத்தனர்.

 

நல்ல ஆரோக்கியமான மனிதராக படத்தில் நடித்து வந்த விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தற்காக மீடியா முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் விவேக். இவரது திடீர் மரணம் தமிழக மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் விவேக் இறந்துவிட்டார் என்று மக்கள் பேசினர். அந்த அளவுக்கு இவரது இறப்பு செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட பயந்து கொண்டிருந்த மக்களும் இவர் உயிரிழந்ததை தொடர்ந்து மிகவும் பயம் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு விவேக் அவர்களின் மனைவி ஒரு நேர்காணலில் தடுப்பூசி போட்டதால் தான் என் கணவர் இறந்து விட்டாரா என்பதை பற்றிய ஒரு விளக்கத்தை கூறியிருக்கிறார்.

விவேக்கின் மனைவி அருட்செல்வி இதைப்பற்றி கூறுகையில் என்னுடைய கணவர் மிகவும் ஹெல்த் கான்ஷியஸாக இருக்கக்கூடிய ஒரு நபர். வாக்கிங் யோகா, சாப்பாட்டுல டயட்னு கரெக்ட்டா இருப்பாரு. பார்த்து பார்த்து தான் எல்லாம் செய்வார். கொரோனா தடுப்பூசி போட்ட அன்னைக்கு கூட அவர் ரொம்ப நல்லாத்தான் இருந்தாரு. ஆனா மறுநாள் அவருக்கு இப்படி ஆகி அவர் இறந்து போவாருன்னு நாங்க யாருமே நினைக்கல. திடீர்னு அவருக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு இன்னைக்கு வரைக்குமே புரியல என்று விவேக் இறப்பு பற்றி உண்மையை உடைத்து பேசியிருக்கிறார் அருட்செல்வி.