#image_title
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் முதலில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில், கமல்ஹாசன் நாயகனாக நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிறகு திடீரென ஹீரோவாக அறிமுகமாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவர் முதன்முதலில் ஜெயம் திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக பிரதர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன்க்கு வில்லனாகவும் நடிக்கிறார். அடுத்ததாக ஜெயம் ரவி தன்னுடைய முப்பத்தி நான்காவது படத்தில் டாடா திரைப்படத்தை இயக்கிய பிரபல கணேஷ் பாபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜுவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்க உள்ளார். இயக்குனர் பி வாசுவின் மகனும் நடிகருமான சக்தி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அதேபோல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ஜெயம் ரவி நடித்த பிரதர் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த மக்காமிஷி என்ற பாடல் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது JR34 படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது ஒரு புறம் இருக்க யார் இந்த தவ்தி ஜீவால் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுடைய கேள்வி எழுந்துள்ளது. எரிமலையின் மகளே என்ற ஆல்பம் பாடல் மூலமாக ஹிட்டானவர்தான் இவர். கடந்த ஆண்டு இயக்குனர் கவுதம் வாசுதேவன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் பாடலில் அறிமுகமான இவர் இவருக்கு கோலிவுட் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. இவர் பொதுவாக புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது . ஆனால் இவர் பிறந்து வளர்ந்தது, கல்வி பயின்றது உள்ளிட்ட பல விவரங்கள் தற்போது வரை அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…