Connect with us

I Wish.. You Wish..? சிறுவயதில் பிரதமர் இந்திரா காந்திக்கு Letter எழுதிய விவேக்.. அடுத்து நடந்தது தான் டுவிஸ்ட்..!!

CINEMA

I Wish.. You Wish..? சிறுவயதில் பிரதமர் இந்திரா காந்திக்கு Letter எழுதிய விவேக்.. அடுத்து நடந்தது தான் டுவிஸ்ட்..!!

 

ரசிகர்களால் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் கடந்த 1987 ஆம் ஆண்டு ரிலீசான மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். இவர் ஃபிலிம்பேர் விருதுகள், தமிழக அரசு விருதுகளை வென்றுள்ளார். விவேக்கின் காமெடி கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.

To the letter written by Vivek Reply sent by Indira Gandhi | விவேக் எழுதிய  கடிதத்துக்கு இந்திராகாந்தி அனுப்பிய பதில்

   

கேளடி கண்மணி, காதல் மன்னன், கண்ணெதிரே தோன்றினாள், உனக்காக எல்லாம் உனக்காக, ஆசையில் ஒரு கடிதம், பெரிய இடத்து மாப்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் விவேக் நடித்துள்ளார். நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது விவேக் சிறுவனாக இருந்தார். விவேக் மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருக்கு நவம்பர் 19-ஆம் தேதி தான் பிறந்தநாள். இந்நிலையில் விவேக் சிறுவனாக இருக்கும்போதே ஆங்கிலத்தில் My Birthday your birthday same. Birthday I wish you. You wish me? என இந்திரா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஒரே நாளில் பிறந்ததினம்: 2ம் வகுப்பு படிக்கும்போது கடிதம் எழுதிய விவேக்..  பதில் போட்ட இந்திரா காந்தி | Actor Vivek writes letter to Former PM Indira  Gandhi - Tamil Oneindia

அதனை பார்த்த இந்திரா காந்தி சிறுவனாக இருந்த விவேக்கிற்கு பதில் அனுப்பியுள்ளார். அந்த பதில் கடிதம் தபாலில் வராமல் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதம் என்பதால் கலெக்டர் தனிப்பட்ட கவனம் எடுத்து அந்த கடிதத்தை சம்பந்தப்பட்டவரிடம் கொண்டு சேர்க்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அப்போது விவேக் குடும்பத்தினர் குன்னூர் மலைப்பகுதியில் இருந்தனர்.

விவேக் எழுதிய கடிதத்துக்கு இந்திராகாந்தி அனுப்பிய பதில் | Tamil News Former  PM IndiraGandhi reply vivek letter

இதனால் கலெக்டர் உத்தரவை நிறைவேற்றுவதற்காக குதிரையில் கடிதத்தை கொடுக்க தேடி வந்தனர். உடனே பயந்து விவேக் ஆப்பிள் தோட்டத்தில் ஒளிந்து கொண்டார். விவேக்கின் தாயார் தனது மகனை அழைத்து வந்த போதுதான் அந்த கடிதம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அனுப்பியது என்பது தெரியவந்தது. அந்த கடிதத்தில் அவரும் விவேக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தை விவேக் பத்திரமாக வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

சின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை | Tamil News Actor Vivek life history

author avatar
Priya Ram
Continue Reading
To Top