#image_title
என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் வடிவேலுவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தாலும், அவருக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது தேவர் மகன் திரைப்படம்தான். அதன் பின்னர் இயக்குனர் வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மக்னே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன. ஆனால் வீ சேகர் அவரை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்த போது கவுண்டமணி, செந்தில் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் வீ சேகர் வடிவேலுவுக்குள் இருந்த திறமையை உணர்ந்து தொடர்ந்து அவருக்கு தன்படங்களில் நடிக்க வைத்தார். தன்னுடைய படங்களில் வடிவேலுவுக்கு கோவை சரளாவை ஜோடியாக நடிக்க வைத்தார். இப்படி வடிவேலுவின் வளர்ச்சி அபரிமிதமாக சென்று கொண்டிருந்த நிலையில் வீ சேகர் படங்களில் இருந்து கவுண்டமணி செந்தில் விலகிக் கொள்ள வடிவேலு முன்னணி நகைச்சுவை நடிகரானார்.
அப்போது நடிகர் விவேக் ஒருநாள் வீ சேகரை சென்று சந்தித்துள்ளார். அவரிடம் “சார் நான் பல வருடமாக நடித்து வருகிறேன். நிறைய வாய்ப்புகளும் வருகிறது. ஆனால் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் வருவதில்லை. ஆனால் உங்கள் படத்தில் நடித்த வடிவேலு நல்ல நிலைக்கு சென்றுவிட்டார். அதனால் எனக்கும் உங்கள் படத்தில் நல்ல வேடம் கொடுங்கள் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே வடிவேலு இருக்கும் நிலையில் விவேக்கை போட்டால் இருவருக்கும் செட்டாகுமா என வீ சேகர் தயங்கியுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் இருவரையும் தன் வீட்டுக்கு சாப்பிட வரவைத்து இருவருக்கும் இடையே நட்பை உருவாக்கியுள்ளார். அதன் பின்னர் இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்து காமெடியில் கலக்கினர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் மார்க்கெட் உருவானதை அடுத்து இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை இயக்குனர் வீ சேகர் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…